முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடலூரில் குடும்பத்தகராறு மகன் குத்தி கொலை: தந்தை தலைமறைவு

கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு மகனை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தையை கூடலூர் போலீஸார் தேடி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:13 AM
பகிர்:

கூடலூரில் குடும்பத்தகராறு காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு மகனை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தையை கூடலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

          தேனி மாவட்டம் கூடலூர் 8-வது வார்டு ராஜாத்தி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரன் என்ற குமரேசன். இவர் கேரள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வேலை பார்த்து வருகிறார். குமரேசனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், சாமுவேல்(25) விவேக்(23) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். குமரேசன் அடிக்கடி குடித்துவிட்ட மனைவி முருகேஸ்வரியுடன் தகராறு செய்வாராம். வழக்கம்போல், வியாழக்கிழமை நள்ளிரவில், மனைவியுடன் குமரேசன் தகராறு செய்துகொண்டிருந்தாராம், இதை மகன் விவேக் தட்டிக்கேட்டாராம். இதில் தந்தை மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமரேசன் இடுப்பில் வைத்திருந்த கத்தியால் விவேக்கை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.

        அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விவேக்கை கம்பம் அரசு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தபோது, சிகிச்சை பலன் இல்லாமல் விவேக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்கு பதிந்து தலைமறைவான குமரேசனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.