சிதம்பரம் அருகே ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டு
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஞானஅடைக்கலபுரமத்தைச் சேர்ந்தவர் சையத்அலி (48). இவர் குடும்பத்துடன் மே.8-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு புதுக்கோட்டை அருகே உள்ள ஒடுகம்பட்டி தர்காவிற்கு
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஞானஅடைக்கலபுரமத்தைச் சேர்ந்தவர் சையத்அலி (48). இவர் குடும்பத்துடன் மே.8-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு புதுக்கோட்டை அருகே உள்ள ஒடுகம்பட்டி தர்காவிற்கு நேர்த்திகடன் செலுத்த சென்றார். இவர் மே.9-ம் தேதி இரவு ஊர் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் திருடுபோனது தெரியவந்து அதிர்ச்சியுற்றார்.
இதுகுறித்து சையத்அலி கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.