முகப்பு
தற்போதைய செய்திகள்

விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுதாக மிரட்டல்: டாக்டர் மீது வழக்கு

கொடுத்த பணத்தைக் கேட்ட பொறியாளரை, விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,

தற்போதைய செய்திகள்

விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுதாக மிரட்டல்: டாக்டர் மீது வழக்கு

கொடுத்த பணத்தைக் கேட்ட பொறியாளரை, விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

கொடுத்த பணத்தைக் கேட்ட பொறியாளரை, விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிய, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, திருமலாபுரம்-இந்திராநகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் மகேஸ்வரன் (36). திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகா, வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் டாக்டர் சிவசுப்பிரமணியம். இவர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர். இருவரும் உறவினர்கள். இந்நிலையில் டாக்டர் சிவசுப்பிரமணியம், மகேஸ்வரனிடம் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35 லட்சம் பெற்றாராம். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லையாம்.

இந்நிலையில் டாக்டர் சிவசுப்பிரமணியம், வியாழக்கிழமை மதுரையில் இருப்பதாகக் தகவல் கிடைத்து மகேஸ்வரன் அங்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் பணத்தைத் தராமல், மிரட்டி அனுப்பிவிட்டாராம். இது குறித்து மகேஸ்வரன் அவணியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடியில் உள்ள இ.கே.எஸ். மருந்துக் கடையில் உள்ள சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் டாக்டர் சிவசுப்பிரமணியம் இருந்துள்ளார். அங்கு டாக்டர் இருப்பதை அறிந்து வந்த மகேஸ்வரன், பணத்தைக் கேட்டுள்ளார். டாக்டர் சிவசுப்பிரமணியம், மகேஸ்வரனை ஆபாசமாகப் பேசி அடித்து கீழே தள்ளிவிட்டாராம். மேலும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மகேஸ்வரன் புகார் செய்தார். காவல் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ், டாக்டர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →