முகப்பு
தற்போதைய செய்திகள்

களக்காடு பகுதியில் பலசரக்கு கடையில் கொள்ளை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நூதன முறையில் பலசரக்குக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் நூதன முறையில் பலசரக்குக் கடையில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

களக்காடு மணிக்கூண்டு அருகே பலசரக்குக் கடை நடத்தி வருபவர் முருகன் (45). இவர் நேற்று இரவு கடையைப் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கடையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை ஒரு சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டியும், கல்லாப் பெட்டியிலிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கமும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து முருகன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.