முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் சூறாவளிகாற்றுடன் கூடிய பலத்த மழை.

திருவண்ணாமலையில்  பிரசித்தி பெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழா நடந்துவருகிறது.இதையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:16 AM
பகிர்:

திருவண்ணாமலையில்  பிரசித்தி பெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழா நடந்துவருகிறது.இதையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இரவு 10.30 மணி முதல்  திருவண்ணாமலை ,அதை சுற்றி உள்ள பகுதிகளில் சூறாவளிகாற்று மற்றூம் இடியுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது.தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்துவரும் கன மழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கிரிவலம் வந்துள்ள சுமார் 10 லட்சம் பக்தர்கள் மழையில் நனைந்தபடி ஒதுங்க இடமில்லாமல் மரத்தின் ஓரமும்,சாலையோர கடைகளிலும்  தஞ்சம் அடைந்துள்ளனர்.சூறாவளி காற்று காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளது .சிறப்பு பேருந்து இயக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடமுடியாமல் திணறிவருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.