நடராஜர் கோயிலில் வரும் ஆண்டு முதல் நாட்டியாஞ்சலி விழாவை பொது தீட்சிதர்கள் நடத்த முடிவு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை, இந்த ஆண்டு (2015) முதல் பொதுதீட்சிதர்களே தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் மூலம் நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை, இந்த ஆண்டு (2015) முதல் பொதுதீட்சிதர்களே தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் மூலம் நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் இதுநாள் வரை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு (2015) முதல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் உலகப்புகழ் பெற்ற நாட்டிய அஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர். நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியன்று தொடங்கி 9 நாட்கள் நடத்துவது என்றும், கோயில் விதிமுறைப்படி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டியாஞ்சலியை நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் நிர்வாகிகள் விவரம்:
தலைவர் - எஸ்.வி.நவமணி தீட்சிதர்,
துணைத் தலைவர்கள் எஸ்.நடராஜ சுப்ரமண்ய தீட்சிதர்,
செயலாளர்- எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதர்,
பொருளாளர்- ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர்,
உறுப்பினர்கள்- சோம.விஜயபாலதீட்சிதர், ஜே.சிவச்செல்வ தீட்சிதர், ஏ.எஸ்.ஏ ஆனந்த தாண்டவ தீட்சிதர், எஸ்.சிவசங்கர தீட்சிதர்.
நாட்டியாஞ்சலியில் பங்கேற்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி:
எஸ்.யு.ஐயப்பதீட்சிதர் செயலாளர்,
தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட்,
செல்போன்: 99441 30006
மின்னஞ்சல்: thillainatyam@gmail.com. thillainirthim33@gmail.com.