இரட்டை இலையை வைத்து விளையாடிய சிறுமி ஆற்றில் விழுந்து சாவு
மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து சிதம்பரம் அருகே செடியில் இருந்த இரட்டை இலையை பறித்து விளையாடிய சிறுமி ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து சிதம்பரம் அருகே செடியில் இருந்த இரட்டை இலையை பறித்து விளையாடிய சிறுமி ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (55). இவரது மகள் மெர்சி (11) வடலூர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலுகிறார். கோடை விடுமுறைக்காக சிதம்பரம் அருகே குமராட்சியில் உள்ள சகோதரி பெரியநாயகிமேரி வீட்டிற்கு மெர்சி வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வெற்றி பெற்றதால், சிறுமி மெர்சி தனது நண்பர்களுடன் கோப்பாடி ராஜன் வாய்க்கால் மதகு அருகே செடியில் உள்ள இலைகளை பறித்து இரட்டை இலை போன்று செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி மெர்சி ஆற்றில் தவறி விழுந்தார். உடனடியாக சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் ஒரு மணி நேரம் போராடி குழந்தையின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்