முகப்பு
தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன்  தொடர்ந்து முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 3,424 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 ஆவது சுற்று முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விட 3,424 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 3 ஆவது சுற்று முடிவுகள் விவரம்: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 37,954 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 34,530 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட பொன். ராதாகிருஷ்ணன் 3,424 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் 21,792 வாக்குகளும், திமுக வேட்பாளர் ராஜரத்தினம் 12,736 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெல்லார்மின் 6,983 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் சுப. உதயகுமார் 1070 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →