முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன், 5 ஆவது சுற்று முடிவில் 1,11,983 வாக்குகளும், திமுக வேட்பாளர் தேவதாசசுநதரம் 70,160 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் சிவனணைந்தபெருமாள் 33,745 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 19,327 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜேசுராஜ் 1,930 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்திய மக்கள் கழகம் வேட்பாளர் தி. தேவநாதன்யாதவ் 3903 வாக்குகளும், எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக், 1762 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 3,574 வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 5 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி 1,07,426 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஜெகன், 73,290 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் ஜோயல் 49,640 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சண்முகம் 18,156 வாக்குகளும், இந்திய கம்யூ, கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் 4,957 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் 5,224 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன் 1,13,641 வாக்குகளும்,
புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி 68,433 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமார் 50,020 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்க்குமார் 13,400 வாக்குகளும், இந்திய கம்யூ, கட்சி வேட்பாளர் லிங்கம் 8,733 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் 45,208 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →