நெல்லை, தென்காசி, தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை
திருநெல்வேலி:திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபாகரன் (அதிமுக) 23,261, தேவதாசசுந்தரம் (திமுக) 13,593, சிவனணைந்தபெருமாள் (தேமுதிக) 6,254, ராமசுப்பு (காங்கிரஸ்) 3,268, ஆம் ஆத்மி (ஜேசுராஜ்) 318. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 9,668 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபாகரன் (அதிமுக) 23,261, தேவதாசசுந்தரம் (திமுக) 13,593, சிவனணைந்தபெருமாள் (தேமுதிக) 6,254, ராமசுப்பு (காங்கிரஸ்) 3,268, ஆம் ஆத்மி (ஜேசுராஜ்) 318. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 9,668 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி:
தென்காசி மக்களவைத் தொகுதி முதல் சுற்று வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வசந்திமுருகேசன் (அதிமுக) 22,479, டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 14,824, சதன்திருமலைக்குமார் (மதிமுக) 8,394, ஜெயக்குமார் (காங்கிரஸ்) 2,847, லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 1,447. அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன் 7,658 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தொகுதி முதல் சுற்று வாக்குகள் அறிவிக்கப்பட்டு்ள்ளது. அதன்படி
அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெ. நட்டார்ஜி 20,302 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஜெகன் 14,794 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் ஜோயல் 10,081 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சண்முகம் 4,007 வாக்குகளும், இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் 748 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் 486 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி 5,508 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.