நெல்லை, தென்காசி, தூத்துக்குடி அதிமுக வேட்பாளர்கள் 3 ஆவது சுற்று முடிவு விவரம்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் 3 ஆவது சுற்று வாக்குகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் 20 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்..

திருநெல்வேலி:
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் 3 ஆவது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: அதன்படி பிரபாகரன் (அதிமுக) 68,604, தேவதாசசுந்தரம் (திமுக) 42,428. அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 26,176 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தென்காசி:
தென்காசி மக்களவைத் தொகுதி 3 ஆவது சுற்று முடிவில் வசந்திமுருகேசன் (அதிமுக) 69,992 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 40,367 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 29.625 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தொகுதி 3 ஆவது சுற்று முடிவில் வாக்குகள் விவரம்: அதன்படி
அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெ. நட்டார்ஜி 62,143 வாக்குகளும், திமுக வேட்பாளர் ஜெகன் 44,707 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் ஜோயல் 28,682 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சண்முகம் 12,174 வாக்குகளும், இந்திய கம்யூ. கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் 2,672 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் புஷ்பராயன் 1670 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி 17,436 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.