நெல்லை, தென்காசி தொகுதி: 8 ஆவது சுற்றில் அதிமுக தொடர்ந்து முன்னிலை
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக 8 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக 8 ஆவது சுற்றில் திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரபாகரன் 1,68,191 வாக்குகளும், திமுக வேட்பாளர் 1,13,901 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரத்தை விட அதிமுக வேட்பாளர் 54,290 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், 1,81,513 வாக்குகளும், புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, 1,10,688 வாக்குகளும் பெற்றுள்ளனர். புதிய தமிழகம் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் 70,825 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.