முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் படுகாயம்

கடலூர் அண்ணாநகரைச் சேர்ந்க பரத் (25) மற்றும் அவரது நண்பர் சங்கர் (31) ஆகிய இருவர் ஃபோர்டு காரில் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் அண்ணாநகரைச் சேர்ந்க பரத் (25) மற்றும் அவரது நண்பர் சங்கர் (31) ஆகிய இருவர் ஃபோர்டு காரில் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு திருமணம் விசாரித்துவிட்டு, கடலூர் நோக்கி திரும்பிச் சென்றுள்ளனர். அப்போது சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் அழிஞ்சிமேடு எனுமிடத்தில் இவர்களது கார் டயர் வெடித்து, எதிரே சிதம்பரம் நோக்கி வந்த ஸ்கார்பியோ மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் ஃபோர்டு காரில் வந்த கடலூர் அண்ணாநகரைச் சேர்ந்த பரத் (25), சங்கர் (31), மற்றும் மற்றொரு காரான ஸ்கார்பியோ காரில் வந்த சிதம்பரம் திருநகரைச் சேர்ந்த தமிழ்மணி (23), கொத்தங்குடித்தெருவைச் சேர்ந்த தினேஷ் (23), அன்பரசன் (25), ராஜ்மோகன் (32) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.