முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை:30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மீதான வழக்கை வருகிற 30ஆம் தேதிக்கு கடலூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும்

Updated On : 19 மே, 2014 at 7:27 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:48 AM

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மீதான வழக்கை வருகிற 30ஆம் தேதிக்கு கடலூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்துக்கு உட்பட்ட புதுக்கடை பகுதியில் கடந்த 1997ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

 இதில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருவள்ளுவன், சிந்தனைசெல்வன், அமுதவன் உள்ளிட்ட 5 பேர் மீது ரெட்டிச்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

 இதுகுறித்த விசாரணை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தாமரைச்செல்வன், திருமார்பன், காத்தவராயன் ஆகியோர் திருமாவளவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவித்தனர்.

 இதையடுத்து வழக்கை வருகிற 30ம்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சுபாதேவி, அன்றைய தினம் திருமாவளவன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.