முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அடிவாரம் பகுதியில் காவல்துறை சார்பில் போஸ்டர்

பழனியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு, சாலையில் செல்லும் பெண்களின் கழுத்தில் உள்ள தங்கசங்கிலி பறிப்பு, மின்விளக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

பழனி அடிவாரம் பகுதியில் பல்வேறு இடங்களிலும் காவல்துறை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பழனியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு, சாலையில் செல்லும் பெண்களின் கழுத்தில் உள்ள தங்கசங்கிலி பறிப்பு, மின்விளக்கு இல்லாத பகுதிகளில் பொதுமக்களிடம் பணம் பறிப்பு உள்ளிட்ட தொடர் சம்பவங்களால் போலீஸார் திணறி வருகின்றனர். தவிர கணக்கன்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கொலைசம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலையில் தனிப்படையும் திண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் பழனி அடிவாரம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏராளமான வாகனங்கள் திருடுபோய் வருகிறது.  பழனிக்கோயிலுக்கு குடும்பத்துடன் சொந்தகாரில் வரும் பக்தர்கள் அடிவாரம் கிரிவீதியில் நிறுத்தும் வாகனங்களை குறிவைத்து திருடர்கள் திருடி சென்றுவிடுகின்றனர். 

தொடர்புகார்களை தொடர்ந்து தற்போது காவல்துறை சார்பில் அடிவாரத்தில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.  காரில் வரும் பக்தர்கள் குறிப்பாக ஆம்னி வாகனங்கள் போன்றவற்றில் வருவோர் காரை திருக்கோயில் பார்க்கிங் பகுதியில் மட்டும் நிறுத்தவும், காரில் விலையுயர்ந்த பொருட்களை வைக்க வேண்டாம் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், காரில் ஒருவர் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பழனியில் காவல்துறையினர் போதிய அளவில் இல்லாத நிலையில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இவற்றை ஒத்துக்கொள்வது போல போலீஸாரே போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.