முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

கம்பம் வாரச்சந்தை அருகே, செவ்வாய்கிழமை மாலை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் அர்ஜூனன் உள்ளிட்ட அதிகாரிகள்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

கம்பத்தில் கேரளாவுக்கு விற்பனைக்கு வைத்திருந்த, 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, செவ்வாய்கிழமை இருவரை உணவு கடத்தில் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கம்பம் வாரச்சந்தை அருகே, செவ்வாய்கிழமை மாலை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், வட்ட வழங்கல் அலுவலர் அர்ஜூனன் உள்ளிட்ட அதிகாரிகள், கேரளாவில் இருந்து வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த ஜீப் ஒன்றை சோதனை செய்தனர். அங்கு, 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வண்டன்மேடு பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரிடம் விசாரித்தனர்.

அவர்,வாரச்சந்தை பின்புறம் உள்ள வீரம்மாள் என்பவரிடம், விலையில்லா ரேஷன் அரிசியை, விலை கொடுத்து வாங்கியதாக கூறினார்.போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு மேலும்,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 550 கிலோ ரேஷன் அரிசி, ஜீப் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஜார்ஜ், வீரம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.