முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே பெண் மர்ம சாவு

பழனி அருகே பாப்பம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மருதை மனைவி வள்ளியம்மாள்(67).  இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கணவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

பழனி அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பழனி அருகே பாப்பம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மருதை மனைவி வள்ளியம்மாள்(67).  இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கணவர் இறந்துவிட்டதால் வள்ளியம்மாள் மட்டுமே தனியே வசித்து வருகிறார்.  அவ்வப்போது நூறுநாள் வேலைக்கு சென்று வரும் வள்ளியம்மாளை புதன்கிழமை நீண்ட நேரமாகியும் வராததால் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்கள் கூப்பிட வந்த போது வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வள்ளியம்மாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து பழனி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் மனநல ஆலோசகராக வேலை செய்யும் மகன் ரங்கநாதனுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்.  வந்து வீட்டை திறந்து பார்த்த போது வள்ளியம்மாள் காது, மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார்.  அவரது காது மற்றும் மூக்கில் இருந்த சுமார் மூன்று பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.   இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி., சண்முகநாதன் தலைமையில் போலீஸார் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.  போலீஸார் தரப்பில் வள்ளியம்மாள் இயற்கையாக இறந்துள்ளதாகவும், நகைகளை உறவினர்கள் கழற்றி சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.