முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுராந்தகம் அருகே ரூ 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்: இருவர் கைது

மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சமத்துவபுரம் அருகில் ஆற்றில் மறைத்து வைத்திருந்த, ரூ 10 மதிப்புள்ள எரிசாராயத்தையும், அதை வைத்திருந்த பெண் உள்பட ஒருவரையும் செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு

Updated On : 21 மே, 2014 at 3:43 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:49 AM

மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சமத்துவபுரம் அருகில் ஆற்றில் மறைத்து வைத்திருந்த, ரூ 10 மதிப்புள்ள எரிசாராயத்தையும், அதை வைத்திருந்த பெண் உட்பட ஒருவரையும் செவ்வாய்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு சூனாம்பேடு போலீஸார் கைது செய்தனர்.

அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்பி ராஜேந்திரன் உத்திரவின்படி, சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் திருநாவுகரசு, துரைசாமி மற்றும் தனிபடை போலீசார்கள் சக்ரபாணி, சீனுவாசன் ஆகியோர், பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆத்தூர் சமத்துவபுர ஆற்றில், எரிசாராயம் மறைத்து இருப்பதாக தகவல் வரவே, அங்கு சென்று சோதனை செய்ததில், 35லிட்டர் கொள்ளளவு கொண்ட 110 பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் இருந்ததை கண்டறிந்தனர். இவற்றின் மதிப்பு ரூ 10 இலட்சம். இதனை வெளியூர்களில் விற்க வைத்திருந்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த வரதப்பகவுண்டர் மகன் துரை (வயது 65),  அவரது மருமகள் வளர்மதி (வயது 30), ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான துரை என்பவரின் மகன் முரளி என்கிற சத்தீஷ் (வயது 34) போலீஸாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.

Advertisement

இது குறித்து சூனாம்பேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.