முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ 74  இலட்சத்தைத் தாண்டியது

பழனிக்கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.74  இலட்சத்தைத்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:20 AM
பகிர்:

பழனிக்கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.74  இலட்சத்தைத்  தாண்டியது.  

     ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.  பக்தர்கள் மட்டுமன்றி கொடைக்கானல் சுற்றுலாப்பயணிகள் என ஏராளமானோர் வந்து சென்றதால் கோயில் உண்டியல்கள் நிறைந்தன. 

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூ.74 இலட்சத்து 21 ஆயிரத்து 45 கிடைத்தது. 

பணம் தவிர ஏராளமான பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட  பூரணகும்பம், வேல், செயின், கொலுசு, டாலர், தாலி, காவடி, உருவங்கள் என ஏராளமாக காணிக்கை செலுத்தியிருந்தனர்.

  தங்கம் 108 கிராமும், வெள்ளி ஆயிரத்து 160 கிராமும் வரப்பெற்றிருந்தது.  இவை தவிர மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய யூரோ, ஜப்பான், குவைத் என பல்வேறு நாட்டு நாணயங்களும், டாலர் நோட்டுக்களும் உண்டியலில் கிடைத்தன.

 மொத்தம் 72 வெளிநாட்டு கரன்சிகள் வரப்பெற்றது.  பல பக்தர்கள் ரிஸ்ட் வாட்ச், நவதானியங்கள், பட்டுச்சேலைகள், பித்தளை பாத்திரங்கள், செல்போன் ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.