மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்த விருதுநகர் மாணவ, மாணவிகளை ஆட்சியர் பாராட்டினார்
மாநில அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
மாநில அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எம்.ஷெரன் கரிஷ்மா( சாத்தூர் டி.ஆர்.ஆர்.கே.வி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆர்.ரத்தினமணி ஆகியோர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர். ராஜாளையம் ஸ்ரீரமண வித்யாலாய மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவி கே.பிரியதர்ஷினி, விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வி.சஹனா ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இதேபோல், இம்மாவட்டத்தில் பல்வேறு பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநில அளவில் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை 26 பேர் பிடித்து சாதனை செய்துள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவி எம்.அபிதா ரத்தினம், என்.அச்சுதாதேவி (ராஜபாளையம் சின்மயா வித்யாலாய பி.எ.சி.ஆர்.ராம்ராஜ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), கே.ஆகாஷ்(விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஆர்.அர்ச்சனா(சிவகாசி செண்பகவிநாயகர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), தீபிகா(சிவகாசி குட்ஷெப்பர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), தேவிகா(அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி), கீதாபிரியா(பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஜே.ஜெயலட்சுமி(எஸ்.எச்.என் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), எஸ்.ஜோதிலட்சுமி(திருத்தங்கல் டி.என்.யு.பி.கே.எம்.என்.எ. மேல்நிலைப்பள்ளி), எஸ்.கந்தகாமாட்சி(ராஜபாளையம் பி.எ.சி.ஆர்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி), எ.லாவன்யா( எஸ்.எச்.என்.வி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி),எஸ்.ஆர்.லியோரம் சித்தார்த்(சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), அதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.லிங்கேஷ், டி.மகேஸ்வரன்(சிவகாசி எஸ்.எச்.என்.மேல்நிலைப்பள்ளி), ஜி.மணிகண்டன்(ராஜபாளையம் பி.எ.சி.எம். மேல்நிலைப்பள்ளி), கே.முகமது சொகையா(பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), எம். நந்தினி பூஜா(ஆவியூர் சுந்தரம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஆர்.ரூபாஸ்ரீ(அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஆர்.ரூபிகா(பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), எஸ்.எம்.ஷேக் முகமத் ரப்பானி(விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஜி.ஸ்ரீநிதி(சிவகாசி ஒய்.ஆர்.ஆர்.டி.வி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), கே.சுருதி(சாத்தூர் கே.சி.எ.டி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), எம்.சுவேதா(ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி), எம்.சுவேதா(சிவகாசி வி.எஸ்.கே.துரைநாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி), ஆர்.சுவேதா(வெங்கடாஜலபுரம் கே.எம்.டி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி), எ.வித்யா ரத்னா(சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி) ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 26 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமே சேர்த்துள்ளனர்.
Advertisement
தமிழக அளவில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பாராட்டி நினைவு பரிசுகளையும் வழங்கினார். அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் விஜயராணி, மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.