துப்புரவு தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பெண் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள காளையன்கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). துப்புரவுத் தொழிலாளி. இவரும், தேனி மாவட்டம், கமுதி அருகேயுள்ள கரிசல்குளத்தைச்
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை துப்புரவுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள காளையன்கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). துப்புரவுத் தொழிலாளி. இவரும், தேனி மாவட்டம், கமுதி அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (29). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரத்துக்கு வந்து ஒருவீட்டில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் செல்வராஜை முத்துலட்சுமி அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த நிலையில் வீட்டில் கிடந்த செல்வராஜை முத்தையாபுரம் போலீஸார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீஸார் நடத்திய விசாரணையில், ஏற்கெனவே திருமணமான செல்வராஜ் குடும்பத்தைவிட்டுவிட்டு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் முத்தையாபுரத்துக்கு வந்து வீடு எடுத்து தங்கியதாகவும், தற்போது மீண்டும் குடும்பத்தினருடன் செல்ல அவர் முடிவு செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,முத்துலட்சுமியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் செல்வராஜை அவரது குடும்பத்தினருன் செல்ல அனுமதிக்காமல் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையெடுத்து, முத்துலட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.