முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபட்ச வருகை: ஸ்ரீவிலி. அருகே வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள்

தற்போதைய செய்திகள்

ராஜபட்ச வருகை: ஸ்ரீவிலி. அருகே வீடுகளில் கருப்புக் கொடியேற்றி மக்கள் போராட்டம்

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:22 AM
பகிர்:

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபட்சவின் அரசு போர்க் குற்றங்களை நிகழ்த்தியது. மேலும், இலங்கை அரசின் இனப் படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியன குறித்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து பெரும்பான்மையான கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டு, புதுதில்லிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மல்லி ஊராட்சி, அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதியதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் எனவும் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்பே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்பாக்கியமான செயல் தமிழக மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. ராஜபட்ச வருகையை எதிர்த்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம். அவர் இந்தியாவை விட்டுச் செல்லும் வரை எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி பறக்கும் என்று கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →