முகப்பு
தற்போதைய செய்திகள்

திருமணமான 35வது நாளில் கரூரில் இளம்பெண் மர்மச் சாவு

கரூர் வாங்கல் அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியைச் சேர்ந்த சரளா(27) என்பவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்புதான்

Updated On : 29 மே, 2014 at 4:32 PM
பகிர்:

திருமணமான 35வது நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கரூர் வாங்கல் அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவருக்கும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியைச் சேர்ந்த சரளா(27) என்பவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சரளா ஈரோட்டில் உள்ள பிரபர தனியார் கண் மருத்துவமனையில் டெக்னீசியனாக வேலைப்பார்த்து வந்தார். ஜெயகுமார் கரூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் வார்டனாக வேலைப்பார்த்து வருகிறார். திருமணம் நடைபெற்ற நாள் முதல், இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை கரூரில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழாவிற்காக சரளா ஈரோட்டில் இருந்து மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சரளா வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் வாங்கல் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

சரளாவுக்கு திருமணமாகி 35 நாட்கள் மட்டுமே ஆவதால் கரூர் கோட்டாட்சியர் கார்த்திகேயன் விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.