முகப்பு
தற்போதைய செய்திகள்

விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.15.31 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ராஜபாளையம், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அனுஷியா கனகமுனி (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அனுஷியா கனகமுனி, ராஜபாளையத்தில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 6.9.10-ம் தேதி தனது உறவினர் குமாரவேல் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் அனுஷியா சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் அனுஷியாவின் கை, கால் நசுங்கி பாதிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

இதனையடுத்து தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், மதுரையில் உள்ள பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுஷியா கனகமுனிக்கு ரூ.15,31,986 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →