தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே தீக்குளித்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்து தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான

எஸ். பாண்டியன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்து தீக்குளித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சனிக்கிழமை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் மன நிம்மதியை இழந்த சித்ராதேவி கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று சித்ராதேவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர்.

உடன் விருதுநகர் மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், அண்ணா தொழிற்சங்கத்தின் இணைச்செயலாளர் சங்கரலிங்கம், திருச்சுழி தொகுதி கழக செயலாளர் பி.எஸ்.பஞ்சவர்ணம், ஒன்றிய செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT