முகப்பு
தற்போதைய செய்திகள்

குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழனி அருகே குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து வரத்து நீர் ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:09 AM
பகிர்:

பழனி அருகே குதிரையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து வரத்து நீர் ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

பழனியை அடுத்து கொடைக்கானல் மேற்கு மலைத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைக்கட்டு மற்றும் குதிரையாறு அணைகள் உள்ளன.  கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் வரதமாநதி அணைக்கட்டு, பாலாறு பொருந்தலாறு அணைகள் வேகமாக நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைநீர் வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டது.  இதனால் சண்முகநதியில் மழைநீர் வெள்ளப்பெருக்காக வெளியேறியது.  கடந்த சிலநாட்களாக வானம் தெளிவாக தெரிந்த நிலையில் வெயிலடித்தது.  பழனியை அடுத்த குதிரையாறு அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

அணையின் மொத்த உயரம் 80அடி.  தற்போது 74.95 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.  தற்போது நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்தான வினாடிக்கு 35 கனஅடியானது அப்படியே ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.  அணைக்கு மூன்று ஷட்டர்கள் உள்ள நிலையில் இரண்டு ஷட்டர்கள் வழியே மட்டுமே வெளியேற்றப்படுகிறது.  ஒரிரு நாட்களில் அணையின் முழு கொள்ளளவு நிறைந்து விடும் அளவுக்கு நீர்வரத்து ஏற்படும் என உதவிப் பொறியாளர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அணையில் இருந்து நீர்வெளியேறும் பகுதியில் பட்டாநிலங்கள் இருப்பதால் வெளியேறும் நீர் வேகமாகும்போது விளைநிலங்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.