தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கும் முகாம்

விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள இவ்வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய அரங்கத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட

எஸ். பாண்டியன்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கின் சார்பில் பாரத பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் பொதுமக்களுக்கான வங்கி கணக்குகள் தொடங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள இவ்வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய அரங்கத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தாட்கோ மேலாளர் சேகரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் அனைத்து தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களை அளித்தனர். இவர்களுக்கு உடனடியாக பணமில்லா கணக்கு தொடங்கப்பட்டு சேமிப்பு புத்தகம் மற்றும் ரூபே கார்டு ஆகியவைகளை ஐ.ஓ.பி வங்கியின் சுயவேலைவாய்ப்பு பிரிவு பயிற்சி மைய இயக்குநர் ராமசந்திரன் வழங்கினார்.

மேலும், இந்த முகாமில் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ், யுனைடெட் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஓ.பி வங்கியின் அலுவலர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT