முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை,பணம் திருட்டு

பழனி பழனியாண்டவர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(65).  இவர் ஓய்வு பெற்ற பெல் நிறுவன அதிகாரி ஆவார்.  சனிக்கிழமை கரூரில் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:

பழனியில் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

பழனி பழனியாண்டவர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(65).  இவர் ஓய்வு பெற்ற பெல் நிறுவன அதிகாரி ஆவார்.  சனிக்கிழமை கரூரில் உறவினர் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.  திரும்ப வந்து வீட்டைத் திறந்து பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் ஜன்னலை அறுத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்து ரொக்கம் ஒரு இலட்சம், இரண்டு பவுன் நகை, கால்கிலோ வெள்ளி நகைகளை திருடி சென்று விட்டனர்.  திருட வந்தவர்கள் பீரோவில் இருந்த கவரிங் நகைகளை இனம்கண்டு திருடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்

திருட்டு குறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருட்டு போன வீட்டில் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.