தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணிச்செயலாளரும், திருச்சுழி

எஸ். பாண்டியன்

பால் விலை, மின்சார கட்டணம் ஆகியவைகளை உயர்த்திய அதிமுக அரசைக் கண்டித்து திமுகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணிச்செயலாளரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம்தென்னரசு முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பங்கேற்று பேசுகையில், தற்போதைய ஆட்சியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படு்த்தி வரும் பால், மின்சார கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வினால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சீனி, மதுபானங்களின் விலையையும் உயர்த்தி பொதுமக்களின் எதிர்ப்புக்கு இந்த அரசு காரணமாகி வருகிறது. அதோடு,   தற்போது சரியான தலைமை இல்லாத நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் அடுத்து வரும் 2016-சட்டபேரவை தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராக கருணாநிதிதான் பொறுப்பேற்பார். அதற்கு தொண்டர்கள் அனைவரும் தயாராக வேண்டும் என அவர்  பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், விஜயகுமார், வி.பி.ராஜன்,  அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் நகராட்சி தலைவர் சுப்புராஜ் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி

மாம்பழ சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

SCROLL FOR NEXT