பழனியில் வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியேற்றம்
பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நகர அலுவலகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி புதிய கட்சி துவங்குவதாக அறிவிக்கும் முன்பே இந்த அலுவலகத்தில் மதுரை
பழனி நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி அலுவலகத்தின் பதாகையை மாற்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றினர்.
பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நகர அலுவலகம் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி புதிய கட்சி துவங்குவதாக அறிவிக்கும் முன்பே இந்த அலுவலகத்தில் மதுரை மாவட்ட அளவில் முதலாக ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தினர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அலுவலகத்தில் வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராசியப்பன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தர், கிழக்கு வட்டார தலைவர் சிவஞானம், மேற்கு வட்டார தலைவர் தங்கராஜ், முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தம், எஸ்சிபி பன்னிருகை செல்வம் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் கட்சி அலுவலகத்தின் முன்பு இருந்த காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் என்ற பதாகையை அகற்றிய கட்சியினர் சைக்கிள் சின்னம், மூப்பனார், காமராஜர், காந்தி, ஜி.கே.வாசன் படத்துடன் கூடிய தமிழ் மாநில காங்கிரஸ் பதாகையை நிறுவினர்.
தொடர்ந்து கொடிக்கம்பத்தில் இருந்த காங்கிரஸ் கொடியை இறக்கி தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை ஏற்றினர். இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், தற்போதுள்ள அலுவலகத்தின் பெயரே மூப்பனார் பவன் என்பதுதான். கட்சியினரே பணம் வசூலித்து டிரஸ்ட் மூலமாக கட்டிய கட்டிடம் இது. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. கட்டிடத்தின் டிரஸ்ட் நிர்வாகிகள் பலரும் ஜி.கே.வாசன் அணியில் உள்ளனர். எனவே, நாங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி, பதாகை வைத்துள்ளோம். எங்களின் தற்போதைய தலைவர் ஜி.கே.வாசன் முறையாக கட்சி பெயர், கட்சிக்கொடியை அறிவிக்கும் வரை 1996ல் ஜி.கே.மூப்பனார் உருவாக்கிய கட்சி கொடியும், பெயரும் இருக்கும் என்றனர். மேலும், புதிய நிர்வாகிகளை அறிவிக்கும் வரை பழைய நிர்வாகிகளே தொடர்வார்கள் என தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மூப்பனார் பேரவை தலைவர் ரவிக்குமார். முன்னாள் நகர தலைவர் சண்முகநாதன், டெலிபோன் கமிட்டி முருகானந்தம். கவுன்சிலர் சுரேஷ், ஓ.சி.ரவி, சங்கராலயம் சிவக்குமார், ஆயக்குடி ஈஸ்வரன், பாலசமுத்திரம் முருகானந்தம், நெய்க்காரபட்டி சண்முகம், கொடைக்கானல் பாலசுப்ரமணி, சுந்தர்ராஜ், காதர்முகமது, சிங்கம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.