வழக்குளில் இருந்து ஜெயலலிதா விடுபட வேண்டி கோவை மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் பழனியில் மொட்டை
பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறவேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி மன்றம் சார்பில் சூலூர் ஒன்றிய
பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறவேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி மன்றம் சார்பில் சூலூர் ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் சுமார் ஐம்பது பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் உத்திரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படதால் அதிமுகவினர் தமிழகம் முழுக்க கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் தமிழக முதல்வராக அரியணை ஏறவேண்டி மீண்டும் கோயில்களில் பிரார்த்தனைகள், மசூதி, சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று பழனி மலைக்கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு கோவை புறநகர் மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழக செயலாளரும், சேர்மனுமான பாலசுந்தரம் தலைமையில் சுமார் 50 பேர் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். பழனி அடிவாரம் சரவணப்பொய்கையில் உள்ள முடிக்கொட்டகையில் மொட்டையடித்து சரவணப்பொய்கையில் நீராடி மலைக்கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு தமிழக மக்களின் முதல்வர் அம்மா பெயரில் சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடத்தினர். அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.