தற்போதைய செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.2.30 லட்சம் முறைகேடு செய்த தலைவி மீது புகார்

விருதுநகரில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கியில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ரூ.2.30 லட்சத்தை முறைகேடு செய்த  குழுத்தலைவி மீது மாவட்ட எஸ்.பியிடம் உறுப்பினர்கள் புகார் செய்தனர்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு வங்கியில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ரூ.2.30 லட்சத்தை முறைகேடு செய்த  குழுத்தலைவி மீது மாவட்ட எஸ்.பியிடம் உறுப்பினர்கள் புகார் செய்தனர். 

இது தொடர்பாக விருதுநகர் நகராட்சி காலனியைச் சேர்ந்த நாகேஸ்வரி(25) மகளிர் குழு உறுப்பினர்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இப்பகுதியில் மல்லிகை குறிஞ்சி என்ற பெயரில் மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவியாக மருதம்மாள்(28) என்பவர் உள்ளார். இவர் இக்குழுக்களில் உள்ள 46 பேருக்கும் தலா ரூ.80 ஆயிரம் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி குடும்ப அட்டை உள்பட ஆவணங்களை பெற்றாராம்.

அதோடு, கடனை பெற்றுத் தர ஒவ்வொருவரும் தலா ரூ.20 ஆயிரம் முதலில்  கொடுக்க வேண்டும் என்றாராம். இதுபோன்று செய்தால் மட்டுமே வங்கியில் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறியும் உள்ளார். இதை உண்மையென நம்பி குழுவில் ஒவ்வொருவரும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.2.30 லட்சம் சேகரித்து கொடுத்தோம். இதை இப்பகுதியில் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைப்பாக இருப்பதாகவும் மருதம்மாள் குறிப்பிட்டாரம்.

இந்நிலையில் நீண்டநாள் ஆகியும் கடன் பெற்றுத் தராமல் எதாவது காரணம் கூறி காலதாமதம் செய்து வந்தாராம். இது குறித்து சேமிப்பு உள்ள வங்கியில் சென்று நேரில் சென்று கேட்கையில், அக்கணக்கில் பணம் இல்லையென தெரியவந்தது. இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரையும் தலைவி ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்தது. எனவே இது குறித்து தலைவியிடம் விசாரணை செய்து எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பியிடம் நேரில் அளித்த அம்மனுவில் மகளிர்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, இது குறித்து பஜார் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய எஸ்.பி உத்தரவிட்டார். அதையடுத்து மகளிர் குழு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT