முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி வையாபுரி கண்மாயில் அமலைகள் அகற்றம்

   பழனி நகரின் மையத்தில் அழகுற காட்சியளிப்பது வையாபுரி கண்மாயாகும்.  முந்தைய காலத்தில் புனித நீராடும் குளமாக இருந்த இக்குளம் தற்போது அதற்கான தடயங்கள் இன்றி உள்ளது.  இந்த குளம் சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  சமீபத்தில் பெய்த மழை காரணமாக இக்குளம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:

பழனி வையாபுரி கண்மாயில் இருந்த அமலைச்செடிகள் மீனவர்களால் அகற்றப்பட்டது.

   பழனி நகரின் மையத்தில் அழகுற காட்சியளிப்பது வையாபுரி கண்மாயாகும்.  முந்தைய காலத்தில் புனித நீராடும் குளமாக இருந்த இக்குளம் தற்போது அதற்கான தடயங்கள் இன்றி உள்ளது.  இந்த குளம் சுமார் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  சமீபத்தில் பெய்த மழை காரணமாக இக்குளம் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வாசுகி இதை தூய்மை செய்ய முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் அது பாதியில் நின்று விட்டது. 

தற்போது வையாபுரி குளத்தில் அமலைச்செடிகள் நிறைந்து இருப்பதால் அதில் உயிரினங்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.  மேலும் இந்த ஒருசெடியானது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 15 லிட்டர் தண்ணீர் வரை குடித்து வளருகிறது.  ஆகவே, இந்த செடிகளை பழனி மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சுமார் 150 மீனவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சங்கிலி, இயக்குனர் அய்யாச்சாமி ஆகியோர் தெரிவித்ததாவது, அமலைச்செடிகளால் மீன்வளர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அரசு செய்து தரும் என பார்த்திருப்பதை விட நாமே சுத்தம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.  சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் தினமும் 150 பேர் என சுமார் ஒருமாத காலத்தில் அமலைகளை அகற்ற தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.