முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் பலத்த மழை:குளத்தின் கரை உடைப்பு

திருநெல்வேலியில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களே குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெள்ளிக்கிழமை வெளியேற்றினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

திருநெல்வேலியில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களே குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெள்ளிக்கிழமை வெளியேற்றினர். இதனால் சாலையில் நீர்பெருக்கெடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியில் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் தொடர்மழை பெய்து வருகிறது. 18 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாமிரவருணி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் உள்ள பெரியகுளம் முழுவதும் நிரம்பி தண்ணீர் ராம்நகரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூழ்ந்தது. தொடர்ந்து மழை விடாமல் பெய்து வந்ததால் பொதுமக்கள் திரண்டு, குளத்தின் ஒரு கரையில் சிறிய உடைப்பை ஏற்படுத்தி சாலையில் தண்ணீரை வடியச் செய்தனர்.

இதனால் தாழையூத்து பிரதான சாலையில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் பாய்ந்தோடியது. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்தபடி சென்றன.

முழு கட்டுரையைப் படிக்க →