முகப்பு
தற்போதைய செய்திகள்

பாசனக் குளத்துக்குச் செல்லும் நீரை தடை செய்து சுவர்: நெல்லை அருகே கிராம மக்கள் மறியல்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பாசனக் குளத்திற்கு செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச்சுவர் கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பாசனக் குளத்திற்கு செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச்சுவர் கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மானூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில் மேலபிள்ளையார்குளம், கீழப்பிள்ளையார்குளம் ஆகிய பாசனக் குளங்கள் உள்ளன. மேலபி்ள்ளையார் குளத்தில் இருந்து கால்வாய் வழியாக கீழபிள்ளையார்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலப்பிள்ளையார் குளத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் மேட்டுப் பகுதிக்கும் கிடைக்கும் வகையில் அங்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. எனினும் கால்வாய் வழியாக தொடர்ந்து கீழபிள்ளையார்குளத்துக்கு தண்ணீர் கிடைத்து வந்தது.

கீழபிள்ளையார்குளத்தின் மூலம் கீழபிள்ளையார்குளம், நடுபிள்ளையார்குளம் பகுதியில் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்ட இடத்தில் கால்வாய் வழியாக செல்லும் நீரை மணல் மூடைகளை வைத்து கீழபிள்ளையார்குளத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தடை ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கீழபிள்ளையார்குளம் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மானூர் பிரதான சாலையில் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தடுப்புச் சுவர் கட்டப்பட்ட பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →