முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து பழனியில் இன்று கடைகள் அடைப்பு

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை ஒருநாள் மட்டும் கடைகள் அடைக்கப்படுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

பழனியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சனிக்கிழமை ஒருநாள் மட்டும் கடைகள் அடைக்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடக நீதிமன்றம் வழக்கு அடிப்படையில் கைது செய்ததை கண்டித்து பழனியில் பழனி நகர அனைத்து வணிகள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒருநாள் கடை அடைப்பு செய்யப்படுகிறது.  இந்த பேரமைப்பின் கீழ் பழனி நகராட்சி கடைகள் சங்கம், பழனி நகர பாத்திர வியாபாரிகள் சங்கம், பழனி அடிவாரம் வர்த்தகர்கள் நலச்சங்கம், பழனி நகர ஜவுளிவியாபாரிகள் நலச்சங்கம், பழனி நகர காய்கனி வியாபாரிகள் சங்கம், பழனி நகர மட்டன்,கோழி வியாபாரிகள் சங்கம், பழனி அரிசிகடை வியாபாரிகள் சங்கம், பழனி நகர இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கம், பழனி நகர எலெக்ட்ரிக்கல் கடைகள் நலச்சங்கம், பழனி நகர சிறுவியாபாரிகள் நலச்சங்கம், பழனி நகர ஜெனரல் மெர்ச்சன்ட் கடைகள் சங்கம் உள்ளிட்ட பலவும் கடை அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.