முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெ. விடுதலை கோரி அதிமுக சார்பில் புதுவையில் நாளை(சனிக்கிழமை) பந்த்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும், நீதி வழங்கவும் வலியுறுத்தி புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும், நீதி வழங்கவும் வலியுறுத்தி புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுவை நகர அதிமுக செயலாளர் ஏ.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும், அவருக்கு நீதி நியாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநில கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்தபடி புதுச்சேரி, காரைக்காலில் சனிக்கிழமை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும், தியேட்டர்களும், அடைக்கப்பட்டிருக்கும். பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் எதுவும் இயங்காது.

இந்த பந்த் போராட்டத்துக்கு புதுவையைச் சேர்ந்த அனைத்து பொதுமக்கள், வணிகர்கள்,

தொழிலாளர்கள், மீனவர்கள் ஒத்துழைப்பு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அமைதியான முறையில் வேரைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்  என்றார் ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.