ஜெயலலிதா விடுதலையாக திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் அங்கப்பிரதட்சனம்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டியும் மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும் தமிகழம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழில்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி. திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகரும் செங்கம் முன்னாள் ஊராட்ட்சி ஒன்றிய துணைத் தலைவருமான பி.எல். அருணாச்சலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அங்கபிரதட்சனம் துவங்கினார்.
தொடங்கிய 3ம் நாளான இன்று 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை நிறைவு செய்தார் அவருடன் 200 பெண்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாள்ர்களிடம் கூறும் போது தமிழக மக்களுக்கான முதல்வர் விரைவில் விடுதலையாக வேண்டியுள்ளேன். அண்ணாமலையார் எனது வேண்டுகோளை ஏற்று விரைவில் ஜெயலலிதா விடுதலையாக அருள்புரிவார் என தெரிவித்தார்.