முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் அதிமுகவினர் உண்ணாவிரதம். 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்திரவின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் தொடர்ந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

பழனியில் கர்நாடக நீதிமன்ற உத்திரவால் கைது செய்யப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்திரவின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவினர் தொடர்ந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு தனியார் அமைப்புகளும் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டம் செய்து வருகின்றன. 

இந்நிலையில் பழனி தலைமை தபால் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நகரம், ஒன்றியம் மற்றும் மாவட்ட மாணவரணி அதிமுக சார்பில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்துக்கு பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு தலைமை வகித்தார்.  ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு பேச்சாளர்கள் பழனி குமணன் உள்ளிட்ட பலர் கண்டனஉரை நிகழ்த்தினர். முன்னாள் எம்பி., குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம்,  ஒன்றியகவுன்சிலர் முத்துச்சாமி, மாவட்ட துணை செயலாளர் பிரேமா சக்திவேல், நகர இளைஞரணி தலைவர் சேக், பழனிபெரியசாமி, அம்மா பேரவை ராஜாமுகமது, பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், பிரபா ராஜ்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பாரூக், அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

நேரமாக, நேரமாக கூட்டம் அதிகரித்த நிலையில் கட்சியினர் உட்கார இடமின்றி ரோட்டிலேயே அமர்ந்ததால் சிறிது நேரத்துக்கு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.