முகப்பு
தற்போதைய செய்திகள்

100 பெண்கள் உள்ளிட்ட 150 அ.தி.மு.க-வினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க-வினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு சொத்து

தற்போதைய செய்திகள்

100 பெண்கள் உள்ளிட்ட 150 அ.தி.மு.க-வினர் மொட்டை போட்டு ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க-வினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு சொத்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க-வினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையையும் 100கோடி அபராதத்தையும் விதித்ததை கண்டித்தும் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும் 100 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை தலைவர் சி.எம்.ஆர்.முரளி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் 2000 பேர் கலந்துக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வி.கோபால்நாயுடு, மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கோவி.நாராயணமூர்த்தி, அபிராமன், முல்லைவேந்தன், மு.க.சேகர், நாகமுத்து, ஸ்ரீதர் கண்டன உரையாற்றினார்கள்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தின் போது அ.தி.மு.க அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட துணை செயலாளர் சி.எம்.ஆர்.முரளி மற்றும் 100 பெண்கள் உள்ளிட்ட 150 பேர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் மொட்டை போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →