முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே  போலி மருத்துவர்கள் மூவர் கைது

புதுச்சத்திரம் பகுதியில் சிலர் எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் போலீஸ் சரகத்தில் போலி மருத்துவர்கள் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

புதுச்சத்திரம் பகுதியில் சிலர் எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுச்சத்திரத்தைச் சேர்ந்த தனசேகரன் (41), வடலூர் ஆபீஸர் நகரைச் சேர்ந்த வீரபத்திரன் (42) ஆகிய இருவரும் எம்பிபிஎஸ் படிக்காமல் ஒரு வீட்டில் ஆங்கில மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டது தெரியவந்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலம்பிமங்கலம் கிராமத்தில் ஆங்கில மருத்துவத்தில் ஈடுபட்ட தேவக்குமார் (34) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் ஊசி, மருந்து, மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.