தற்போதைய செய்திகள்

பழனி-கொடைக்கானல் சாலையில் மழையால் சாலைகள் சேதம், மண் அரிப்பு

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் தொடர் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது.  இதை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

என்.​ அங்​கு​பாபு

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் தொடர் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது.  இதை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்ல பழனி வழியாகவும், வத்தலக்குண்டு வழியாகவும் சாலைகள் உள்ளது.  இதில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை ஏராளமான கொண்டைஊசி வளைவுகளுடனும், பசுமைப் பள்ளத்தாக்குகளுடனும் உள்ளது.

இதனால் இந்த சாலையை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  இந்த சாலையை அகலப்படுத்த தற்போது நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்கவுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக கொடைக்கானலில் நல்லமழை பெய்து வருகிறது. 

இதனால் பழனி கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  திங்கள்கிழமை பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.  பழனி-கொடைக்கானல் சாலையில் கனமழை காரணமாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பாறைகள் விழுந்துள்ளது.  சிறிய மரங்களும், மரக்கிளைகளும் ஒடிந்து விழுந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

 இவற்றை புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன் தலைமையில் உதவிப் பொறியாளர் ஜெயபால் மற்றும் பணியாளர்கள் அகற்றி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பாறைகள், மரக்கிளைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்து சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளது.  தண்ணீர்த்தொட்டி என்ற இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 950அடி உயரத்தில் உள்ளது. 

இந்த இடத்தில் மழைகாரணமாக மண்அரிப்பு ஏற்பட்டு சாலையில் சுமார் நான்கு மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்தது.  இதனால் மண்ணுடன் சேர்ந்து சாலையும் கீழே இறங்கிவிட்டது.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரபணி மேற்கொண்டு வருகின்றனர். 

சாலையின் கீழே தரைத்தளம் சமன்செய்யப்பட்டு அங்கிருந்து சுமார் ஐந்தாயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது.  இந்த சாலை அரிப்பால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், லாரிகள் எல்லாம் சாதாரணமாக சென்று வருகின்றன. 

ஆனாலும் சுமார் 20 டன் எடைகளுக்கு மேல் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, சாலை சீரமைத்தவுடன் ஒரிரு நாட்களில் இந்த தடையும் நீங்கிவிடும் என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT