முகப்பு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன தரங்கம்பாடி மீனவர்கள் 5 பேரும் கரை திரும்பினர்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று காணமல்போன மீனவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை அதிகாலை பத்திரமாக கரை திரும்பினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:58 AM
பகிர்:

நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்று காணமல்போன மீனவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை அதிகாலை பத்திரமாக கரை திரும்பினர்.

தரங்கம்பாடி மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கராஜ்,ராமலிங்கம்,தர்மபாலன்,ஜெகன் மற்றும் வேதாரண்யம் அருகே உள்ள வானவன்மகாதேவியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் ஆகிய 5 பேரும் தங்கராஜ் படகில் கடந்த 3 ந்தேதி தரங்கம்பாடியிலிருந்து மீன்பிடிக்க சென்றனர்.6 ந்தேதி கரை திரும்பவேண்டிய இவர்கள் கரை திரும்பாத காரணத்தால் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவப் பஞ்சாயத்தார்கள் நாகை மாவட்ட ஆட்சியர்,மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை புகார் அளித்தனர்.தொடர்ந்து தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில் ஹெலிக்காப்டர்,ரோந்து கப்பல்கள் மூலம் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மீனவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை காலை தரங்கம்பாடி வந்து சேர்ந்தனர்.இது தொடர்பாக மீனவர்கள் கூறியது,

Advertisement

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 120 கடல் மைலுக்கு அப்பால் நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துக் கொண்டிருந்தோம்.அப்போது பலத்த காற்று காரணாமாக கயறு அறுந்து படகு ஆழ்கடல் நோக்கி இழுத்து செல்லப்பட்டுவிட்டது.மேலும் படகின் எஞ்சினும் பழுதகிவிட்டது.அதனால் கடந்த 3 நாள்களாக நடுகடலில் படகிலேயே தத்தளித்தோம்.இந்நிலையில்  நாகூரிலிருந்து  மீன்பிடிக்க வந்த மீனவர்களின் படகை புதன்கிழமை காலை பார்த்தோம்.பின்னர் அவர்களின் உதவியுடன் வியாழக்கிழமை அதிகாலை நாகப்பட்டினம் கரைக்கு வந்ந்து சேர்ந்தோம்.அங்கிருந்து வாகனம் மூலம் தரங்கம்பாடிக்கு வந்தோம் என தெரிவித்தனர்.

தரங்கம்பாடிக்கு வந்த மீனவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நேரில் சந்தித்து அவர்கள் பட்ட சிரமங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதலையும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் ஜி.கிருஷ்ணசாமி,வட்டாட்சியர் கணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments