முகப்பு
தற்போதைய செய்திகள்

வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.35 லட்சம் தப்பியது: ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. பணத்தை எடுக்க முடியாததால் அதிலிருந்த ரூ.35 லட்சம் தப்பியது. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. பணத்தை எடுக்க முடியாததால் அதிலிருந்த ரூ.35 லட்சம் தப்பியது. இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு, முத்தாலம்மன் பஜாரிலிருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் ஆகியோர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஏ.டி.எம். மையம் திறந்து கிடந்துள்ளது. அதனுள் சென்று போலீஸார் பார்த்த போது இயந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து உஷாரான போலீஸார் குற்றவாளிகளை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். அதிகாலை நேரத்தில் ஏற்கெனவே சில திருட்டு வழக்குகளில் தொடர்பு உடைய ஒரு நபர் அவ்வழியே சுற்றித் திருந்துள்ளார். அவரை போலீஸார் பிடித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுத்துள்ளார். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை போலீஸார் ஆய்வு செய்து பார்த்தபோது, போலீஸார் பிடிந்து வந்த நபர் தனது தொழிலுக்குப் பயன்படுத்தும் உளியைக் கொண்டு மிஷினை உடைத்ததும், உடைக்க முடியாமல் உளி உடைந்ததும்

இதனையடுத்து ராஜ் ஆசாரி ஏ.டி.எம். மையத்திலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. உளி உடைந்ததால், ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்த ரூ.35 லட்சம் பணம் தப்பியது.இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜ் ஆசாரியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →