முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே கூலித் தொழிலாளி கொலை: மனைவி உள்ளிட்ட மூவருக்கு வலைவீச்சு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சொக்காலாடி வாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன்(50). கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்வதும், சிலறைத் திருட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கமாம்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சொக்காலாடி வாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன்(50). கூலித் தொழிலாளியான இவர் குடிபோதையில் தகராறு செய்வதும், சிலறைத் திருட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கமாம்.

சில தினங்க்களுக்கு முன்னர் இவர், மைத்துனர் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்பட்டுகிறது. இதனால் இவரது மனைவி ரேவதி விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் கர்ணனின் மனைவி ரேவதி, மைத்துனர் செல்வராஜ்,, ரங்கசாமி ஆகியோர் கட்டையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தப்பியோடிய ரேவதி உள்ளிட்ட மூவரைத்  தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →