விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்: திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் கைது
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரண நிதி வழங்கக் கோரியும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உறுதியாக
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரண நிதி வழங்கக் கோரியும், வேலை உறுதியளிப்புத் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவதுடன் 200 நாட்களாக உயர்த்தக் கோரியும், அதன் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தவும், வீடு கட்ட ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கக் கோரியும், விவசாயிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 3000
வழங்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மாநில விவசாய சங்க செயலர் முத்தரசன் தலைமையில் சுமார் 3 ஆயிரம் பேர், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினன்ர் அவர்கள் கைது செய்யப்பட்டு மங்களநாயகி மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.