முகப்பு
தற்போதைய செய்திகள்

தீபாவளி பண்டிகை: சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டம் அதிகமானதால் சிதம்பரத்தில்   போலீஸார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். மேலும் மேலரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டம் அதிகமானதால் சிதம்பரத்தில்   போலீஸார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். மேலும் மேலரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரம் வட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள், தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சிதம்பரம் நகருக்கு வந்து ஜவுளி மற்றும் பொருள்கள் வாங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகை அக்.22-ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு சிதம்பரம் மேலரதவீதியில் ஜவுளி, பட்டாசு, மளிகை பொருள்கள் வாங்க கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல் மேலரதவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இதனையடுத்து சிதம்பரம் நகர போக்குவரத்து போலீஸார் மேலவீதி வழியாக பேருந்து போக்குவரத்தை தடை செய்து, மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் கூட்டத்தை கண்காணிக்கவும், திருட்டினை தடுக்கவும் மேலரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலவீதி, தெற்குவீதி ஆகிய பகுதிகளில் போலீஸார் ஒலிபெருக்கிகளை பொருத்தி, மக்களுக்கு போதிய வழிகாட்டுதலை செய்து வருகின்றனர். மேலும் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்களை தடுக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வின் லாமோக் தெரிவித்தார்.

சிதம்பரம் வட்டத்தில் மொத்தம் 83 பட்டாசு கடைகளுக்கு உதவிஆட்சியர் எம்.அரவிந்த் உரிமம் நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கியுள்ளார். இதில் மூன்று புதிய கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் மட்டும் மொத்தம் 43 பட்டாசு கடைகளுக்கு உரிமம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறையினரால் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.