விருதுநகர் மாவட்டத்தில் புதிய ரக விதைகள் விற்பனைக்கு வந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் புதிய ரக விதைகள் விற்பனைக்கு வந்தால் அது தொடர்பான தகவல்களை வியாபாரிகள் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என விதை ஆய்வுத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் புதிய ரக விதைகள் விற்பனைக்கு வந்தால் அது தொடர்பான தகவல்களை வியாபாரிகள் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என விதை ஆய்வுத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம்மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்கள் மூலம் பல்வேறு வகையான விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாயிகள் அனைவருக்கும் தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்காக அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, இப்பகுதியிலுள்ள விதை விற்பனை நிலையங்கள் மூலம் புதிய ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று புதிய ரக விதைகள் விற்பனை செய்தால் அது தொடர்பான விவரங்களை விதை ஆய்வாளர் மற்றும் விதை ஆய்வுத்துறை துணை இயக்குநருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு விதைக் குவியலின் தரம், விதை மாதிரி விவரங்கள் பைகளில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். விதை விவரம் ஏற்கனவே எடுக்கவில்லை என்றால் புதிதாக மாதிரிகள் எடுத்து அனுப்பி தரம் பற்றிய முடிவுகளை இணைத்தல் வேண்டும். அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் விதை விவரங்களையும் விதை ஆய்வுத் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். மேலும், புதிதாக வந்த விதைகள் சில நாள்களில் விற்று தீர்ந்தாலும், அதற்குரிய விதை மாதிரிகளை வைத்திருப்பதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Advertisement
இதேபோல், வீரிய பிடி, பருத்தி ரகங்கள் மரபணு பொறியியல் அங்கிகரிப்பு குழுவின் அனுமதி பெற்ற விதைகளையே விவசாயிகளுக்கு விநியோகம் செய்யவும், குழு அங்கிகாரம் இல்லாத விதைகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு அனுமதி பெறாத விதைகள் இருந்தால் அலுவலர்களிடம் தெரிவித்து தேவையான ஆலோசனை பெற்ற பின்னரே விநியோகிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கு வியாபாரிகள் முன்வர வேண்டும் என விருதுநகர் விதை ஆய்வுத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி தெரிவித்துள்ளார்.