முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கொத்தன்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லிங்கம் மகன் பிச்சைமாரி (32). இவருக்கும் ராமலட்சுமி (29) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கொத்தன்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லிங்கம் மகன் பிச்சைமாரி (32). இவருக்கும் ராமலட்சுமி (29) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கொத்தன்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் லிங்கம் மகன் பிச்சைமாரி (32). இவருக்கும் ராமலட்சுமி (29) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு புவனேஷ்வரி (12), புஷ்பகலா (5) என்ற இரு பெண் குழந்தைகள் உண்டு.

புவனேஷ்வரி, கொத்தன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் புவனேஷ்வரி படித்துக் கொண்டிருக்கும் போது, பிச்சைமாரி மகளுக்கு சொல்லிக் கொடுப்பதுபோல அருகில் உட்கார்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மகள், தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து 26.5.14-ம் தேதி பிச்சைமாரியை ராமலட்சுமி கண்டித்துள்ளார். இதனையடுத்து வீட்டைவிட்டு ராமலட்சுமியை வெளியேறும்படி பிச்சைமாரி கூறியுள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி தனது இரு மகள்களுடன் ராஜபாளையத்தில் உள்ள தாய் வீட்டில் போய் இருந்துள்ளார். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் பேசி இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் படித்துக் கொண்டிருந்த புவனேஷ்வரியிடம் முன்னர் செய்தது போலவே பிச்சைமாரி நடந்து கொண்டிருந்துள்ளார். இது குறித்து ராமலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பிச்சைமாரியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →