முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணனைக் கொலை செய்த தம்பி சிறையிலடைப்பு

கீரனூர் அருகே ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு உருமையா(30), ராஜா(28) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஓட்டுநரான உருமையாவுக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூர் அருகே அண்ணனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான தம்பியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர்.

கீரனூர் அருகே ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு உருமையா(30), ராஜா(28) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஓட்டுநரான உருமையாவுக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் பெண் பார்த்து வந்தனராம். ஆனால், பல இடங்களில் பெண் பார்த்தும் ஒரு இடத்திலும் முடிவாகாத நிலையே நீடித்து வந்ததாம்.

இதனிடையே இவரது தம்பி ராஜா தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென தனது பெற்றோரிடம் வற்புறுத்தினாராம். இதற்கு மறுத்ததால் ராஜாவுக்கும் அவரது வீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் விரக்தி அடைந்த  ராஜா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உருமையாவை  வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டோர். இது குறித்து பதிந்து விசாரித்து வந்த கீரனூர் போலீஸார்  ராஜாவை கைது செய்து திருச்சி  மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →